தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசு..! ரொம்ப அலட்சியம்... EPS கண்டனம்..!!
கூட்டுறவுத்துறை பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இபிஎஸ் கூறினார்.
SRB மற்றும் DRB பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு காலம் தாழ்த்தி அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத் துறை சார்பில், கடந்த அக்டோபர் மாதம் SRB மற்றும் DRB பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாட்கள் கடந்த பின்னும், இதுவரை முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு மாணவர்களை வஞ்சித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பெரும் கனவுகளோடு தாங்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளை இதுவரை வெளியிடாத விடியா திமுக அரசைக் கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள, திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.
TNPSC Group2 தேர்வை முறையாக நடத்த தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட வக்கற்ற அரசாக முதல்வரின் திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது என்று சாடினார்.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10,000...! ஜெ. பிறந்தநாளில் வாக்குறுதிகளை அள்ளிவீசிய EPS..!!
தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்றும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவுத் துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாள்... களைகட்டிய அதிமுக அலுவலகம்..! ஜெ. திருவுருவச் சிலைக்கு இபிஎஸ் மரியாதை..!!