×
 

கிரிமினல்களுக்கு ஆளுங்கட்சி அடைக்கலம்..! தீய சக்தி திமுகவை ஒடுக்குவோம்... இபிஎஸ் சூளுரை..!

ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை செய்து வரும் தீய சக்தி திமுக கூட்டத்தை ஒடுக்குவோம் என இபிஎஸ் சூளுரைத்துள்ளார்.

தமிழகத்தை தலை நிமிர வைப்பேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாய்ச்சவடால் விடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 56 மாத அதிமுக ஆட்சியில் காவல்துறையை தனது ஏவல் துறையாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்று இருப்பதாகவும் கூறினார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒருபுறம் என்றும் அரசுக்கு எதிராக போராடுவோர் மறுப்புறம் எனவும் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் பிடில் வாசித்தது போல முதலமைச்சர் மகளிர் மாநாடு நடத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். 56 மாதங்களாக நிர்வாக திறனற்ற ஆட்சியால் கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றும் நிதியே இல்லாமல் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதன் மூலம் பெண்கள் சுதந்திரம் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை செய்து வரும் தீய சக்தி திமுக கூட்டம் மூலைக்கு மூலை அடுக்கி ஒடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார். காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி வைத்திருப்பதால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: வர்த்தக ஒப்பந்தம்..! சரித்திரத்தை சாத்தியப்படுத்திய பிரதமர் மோடி..! EPS வாழ்த்து..!

மேலும், பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தடையில்லாமல் போதைப் பொருள் கிடைப்பதாக கூறினார். ஆளுங்கட்சியினர் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் தான் தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இபிஎஸ் முன் வைத்தார். போராடுபவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையை திமுக அரசு செய்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-ஐ கூட சேர்க்கலாமா? வேணாமா? உளவுத்துறை கொடுத்த அறிக்கை! திமுக மாஸ்டர் ப்ளான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share