×
 

முதல்வருக்கு ஓபன் சேலஞ்ச் கொடுத்த EPS... செய்யலாம்.., ஆனா... கனிமொழி MP பதில்...!

நேருக்கு நேர் பேச தயாரா என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கனிமொழி எம்.பி. பதில் கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கள ஆய்வு மேற்கொண்டார். திட்ட பணிகளை தொடங்கி வைத்து தேசிய முதலமைச்சர் ஓபன் சேலஞ்சு விடுப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிமுக ஆட்சியில் உருவானது தான் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்தார். நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று எனவும் தெரிவித்தார்.

நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல் என்று முதலமைச்சரை விமர்சித்தார். பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா என்றும் அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார்., திமுக ஆட்சி பற்றி கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா எனக் கேட்டுள்ளார். என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஏன் அடி வயிறு எரியுது? புறமுதுகு காட்டி ஓடும் பழனிச்சாமிக்கு பீலா தேவையா? அமைச்சர் ரகுபதி பதிலடி

முதல்வருக்கு இருக்கும் வேலைப்பளுவில் எதிர்க்கட்சித் தலைவருடன் விவாதம் செய்ய நேரமில்லை என்று கூறினார். கட்சியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றும் யார் வேண்டுமானாலும் அவருடன் விவாதிக்க தயாராக இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். அவர்களுடன் விவாதிக்கட்டும்., அதை எல்லாம் தாண்டி கேள்விகள் இருந்தால் முதல்வர் பதிலளிப்பார் என்று கனிமொழி எம்.பி. கூறினார். 

இதையும் படிங்க: பத்து தோல்வி பழனிசாமியால் பீதி... 100 மாவட்ட செயலாளர்கள் கொடுத்த ஷாக்... விழிபிதுங்கும் அதிமுக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share