இபிஎஸ் மாஸ் என்ட்ரி... செங்கோட்டையன் கோட்டையை தெறிக்க விட்ட அதிமுக தொண்டர்கள்...!
அதிமுகவில் கே.ஏ.செங்கோட்டையன் பதவி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக கோபிசெட்டிபாளையம் வழியாக செல்லும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பு கோரிக்கையை முன்வைத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த கே. ஏ .செங்கோட்டையன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். எனினும் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி உயர்த்தியுள்ளார் கே.ஏ செங்கோட்டையன்.
இந்நிலையில் உதகையில் நடைபெறும் பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக செல்கிறார். அவருக்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் அதிமுக சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
கே. ஏ. செங்கோட்டையன் பதவி நீக்கத்தால் எவ்வித பாதிப்பும் கட்சியில் இல்லை என்பதை காட்டுவதற்காக இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது..
இதையும் படிங்க: செங்கோட்டையன் ஆட்டம் குளோஸ்... அமித் ஷாவிடம் அந்த விஷயத்தை ஓபன் செய்யப் போகும் இபிஎஸ்...!
சேலத்தில் இருந்து பவானி சித்தோடு கவுந்தப்பாடி வழியாக வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் சார்பாக இந்தப் பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்படவில்லை..
அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் மட்டும் வரவேற்பு அளித்தனர்.
முன்பாக சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு அதிமுக கொடிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன..
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: “செல்லாக்காசா போய்டுவாங்க”... செங்கோட்டையனுக்கு மண்ணை அள்ளி தூற்றாத கொடுமையாக சாபம் விட்ட ஆர்.பி.உதயகுமார்...!