சும்மா உருட்டக்கூடாது! முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி இபிஎஸ் சரமாரி கேள்வி...
முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்துள்ளார்.
முதலaமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தை அரசு முறைப் பயணமாக அறிவித்தார். இந்தப் பயணத்தின் மூலம், தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, பல்வேறு தொழில் நிறுவனங்களுடனும் அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு, தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் அறிவுசார் பங்களிப்பை உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியது என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.இந்தப் பயணத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
எதிர்க்கட்சிகள் இந்தப் பயணத்தை வெறும் அரசியல் நாடகம் என்றும், தமிழ்நாட்டின் உள்ளூர் பிரச்சினைகளைப் புறக்கணித்து வெளிநாட்டில் சுற்றுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான அனைத்து விபரங்களையும் வெளியிட தயாராக என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது கேள்வியை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கடைசி அழைப்பு... எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க ஆரம்பித்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்... அதிமுகவில் பூகம்பம்...!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தொழில் முதலீடுகள் மற்றும் தொடங்கப்பட்ட தொழில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். பொய் புரட்டும் புள்ளிவிபரம் வெளியிட்டு, தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சாடினார். தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்கள் திடீர் பல்டி... முக்கிய புள்ளியைச் சந்திக்க சாரை சாரையாய் வாகனங்களில் பயணம்...!