எங்கு பார்த்தாலும் போராட்டம்..! இனி எப்போதும் திமுக ஆட்சி இல்லை..! இபிஎஸ் திட்டவட்டம்..!
தமிழகத்தில் இனி எப்போதும் திமுக ஆட்சியில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியின் கீழ் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார். ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், பல்வேறு தரப்பினரும்., ஆசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தங்கள் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தினமும் அல்லது அன்றாடம் ஒரு போராட்டம் நடைபெறுவதால் தமிழகம் "போராட்டக்களமாக" மாறிவிட்டதாக அவர் விமர்சிக்கிறார். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, மக்கள் அமைதியிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார். திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்றும், போதைப்பொருள் விற்பனை எங்கும் நிறைந்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டி வருகிறார். மக்கள் துன்பம், வேதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா என்று கேள்வி எழுப்பி வருகிறார். சென்னை சூளையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் இனி எப்போதும் திமுக ஆட்சியை அமைவதற்கு வாய்ப்பு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறிவிட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் களம்..! யார் யார் வேட்பாளர்கள்? 5வது நாளாக EPS நேர்காணல்..!
ஆசிரியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மக்கள் தொடர்ந்து போராடும் அளவுக்கு வெறுப்பை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டணும்..! செய்வீர்களா? ஜெ. பாணியில் இபிஎஸ் FIRE ஸ்பீச்..!