×
 

அமித்ஷாவுடன் பேசியது என்ன? OPS, சசிகலாவுக்கு இடமிருக்கா..? EPS பரபரப்பு பேட்டி...!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக நேற்று இணைந்தது. இதை அடுத்து நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் அமித் ஷாவை சந்தித்து பேசியது என்ன என்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். 

உள்துறை அமித் ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாக தெரிவித்தார். தமிழகத்தில் திமுக விழுத்தப்பட வேண்டும் என்பதற்காக வலுவான கூட்டணி அமைத்துள்ளோம் என்று தெரிவித்தார். திமுகவை குறித்து 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறினார்.

தங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்றும் திமுகவை வீழ்த்தி அதிக இடங்களில் தங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் உறுதிப்பட கூறினார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமல்படுத்துவதாக கூறினார். பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு கிடையாது என்று விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாமக... டெல்லி விரையும் இபிஎஸ்..! அமித் ஷா உடன் முக்கிய ஆலோசனை. !

தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம் என்பது ஏமாற்று வேலை என்று கூறினார். திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பல மடங்கு அதிகரித்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 5.5 லட்சம் கோடி கடன் அதிகரித்து இருப்பதாக கூறினார். சசிகலா மற்றும் OPS ஐ அதிமுகவில் இணைக்கும் பேச்சிற்கு இடமில்லை என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: அதிமுகவுடன் களமிறங்கிய பாமக…! கூட்டணியை உறுதி செய்த இபிஎஸ் - அன்புமணி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share