×
 

SIR பணியில் சுணக்கம்... திமுக அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு...!

உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறும் மக்கள் விரும்புகின்றனர் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார். பீகார் மாநிலத்தில் என் டி ஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்ததாக கூறினார். உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறும் மக்கள் விரும்புகின்றனர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: "Wait and see" - அதிமுக+பாஜக கூட்டணியில் இணையப் போகும் முக்கிய கட்சி... ஹின்ட் கொடுத்த நயினார் நாகேந்திரன்...!

எஸ் ஐ ஆர் மூலம் நேர்மையான வாக்காளர் பட்டியல் தயாராகும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர் பணிகள் சுணக்கமாக நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்தார். எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறக்கூடாது என அதிகாரிகள் சிலர் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். எஸ் ஐ ஆர் பணிகளில் குளறுபடி நடைபெறுவதாக அடுக்கடுக்கான புகாரை முன்வைத்தார். எஸ் ஐ ஆர் படிவத்தில் எந்த குழப்பமும் இல்லை என முதலமைச்சருக்கு பதில் அளித்தார். மேலும் நான்காம் வகுப்பு படித்தவர்களை BLO வாக நியமித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: மீண்டும் அரியணை ஏறும் பாஜக... கூட்டுத் தலைமைக்கு கிடைத்த வெற்றி... பிரதமருக்கு EPS வாழ்த்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share