ஆமா 10 நிமிஷம் தனியா பேசினேன்! மூஞ்சை மறைக்க அவசியம் இல்ல... இபிஎஸ் பரபரப்பு பேட்டி
கைக்குட்டையால் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றார். நேற்று முன்தினம் மதியம் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து இபிஎஸ் கலந்துரையாடினார்.
பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையான செங்கோட்டையன் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த கலந்துரையாடல் தொடர்பாக கேட்டபோது, அவர் முகத்தை மூடிக்கொண்டு சென்று விட்டதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாவட்டங்களில் அதிமுகவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என கூறினார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக விளக்கமளித்தார். பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதாகவும், நேரம் அதிகமானதால் தன்னுடன் இருந்தவர்களை அனுப்பியதாகவும் கூறினார். தான் மட்டும் அமித்ஷாவிடம் 10 நிமிடம் தனியாக பேசியதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: EXPIRED தலைவர்கள் ஒப்பாரி வெச்சாலும்... அச்சச்சோ என்ன பொசுக்குனு இப்படி பேசிட்டாரு உதயகுமார்!
அரசாங்க காரில் தான் அமித்ஷாவை சந்திக்க சென்றதாகவும், முகத்தை தான் துடைத்தேன் என்றும் கூறினார். முகத்தை மூடிக்கொண்டு செல்ல அவசியம் இல்லை எனவும் ஒரு கட்சியின் பொதுச் செயலாளரை திட்டமிட்டு அவதூறாக பேசுவது சரி அல்ல என்றும் கூறினார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என அமித்ஷா கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலில் விழுந்த பிறகு கர்ச்சீப் எதற்கு? எடப்பாடியை வசைப்பாடிய முதல்வர்