×
 

ஓபிஎஸ் ஒரு துரோகி... அவங்க மூணு பேரும் திமுகவின் B டீம்... இபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்...!

அவதூறு பரப்புவதாக கூறிய முதலமைச்சரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் கப்பலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். விரக்தியின் உச்சத்தில் உள்ள இபிஎஸ் தினம்தோறும் அவதூறுகளை கூறுகிறார் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தார். அப்படி என்ன அவதூறு கருத்து கூறினேன் என தெரியவில்லை என்று கூறி உள்ளார். விவசாயிகள் சாலைகளில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுப்பினார்.

உரிய முறையில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று புகார் தெரிவித்த அவர், நாளொன்றுக்கு 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தால் பிரச்சனை இருக்காது என தெரிவித்தார். அமைச்சர் சக்கரபாணி கூறியது போல் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். 15 நாட்களாக கொள்முதல் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

விவசாயிகளை நேரில் சென்று சந்திப்பதற்கு துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பயம் என்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வந்த முதலமைச்சர் விவசாயிகளை சந்திக்காமல் சென்று விட்டார் என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறாமல் முதல்வர் சென்றுள்ளார் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: இபிஎஸ்- ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம்… இந்த ஒற்றுமை தொடரும்... TTV தினகரன் சூளுரை..!

 42 லட்சம் டன் நெல் கொள்முதல், திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பொய்யான தகவல் எனவும் தெரிவித்தார். தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த நான்கு ஆண்டுகளில் 1.15 கோடி டன் நெல் மட்டும் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டு ஆளும் அரசு எதற்கு அஞ்சுகிறது என்றும் இதற்கு பயப்பட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்... தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் இணைந்து மரியாதை...!

தொடர்ந்து பேசிய அவர், ஓபிஎஸ் ஒரு துரோகி என்றும், டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஓபிஎஸ் ஆகிய மூவரின் கூட்டணி என்பது திமுகவின் பி டீம் என்றும் தெரிவித்தார். கட்டுப்பாட்டை யார் மீறினாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share