×
 

சீர்கெட்டு போன திருப்பூர் மாநகராட்சி... அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்... இபிஎஸ் அறிவிப்பு...!

திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மையமாக விளங்கும் இந்த நகரம், ஜெர்சி மற்றும் உடைத் தொழிலால் உலக அளவில் அறியப்படுகிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் பின்னணியில், மாநகராட்சி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள், மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருகின்றன. கழிவு மேலாண்மை, ஊதிய தாமதங்கள், சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் போன்றவை, இந்த நகரின் அடிப்படை சேவைகளை சீர்குலைத்துள்ளன.

திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திய பிறகு சாலைகள் சீரமைக்கப்படாததால் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகள் என தொடர் கதையாகி வருவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. செயல்படாமல் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக கூறியுள்ளது.

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை (BLO) திமுக-வினர் மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதை வேடிக்கை பார்க்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இபிஎஸ் ஆட்சி அமைந்தால் மெட்ரோ வருமா? அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி... விளாசிய டிடிவி தினகரன்...!

மேலும், இவற்றை வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: திமுக-காரங்க கிட்ட இருந்து பெண்களை காப்பாத்தணும்... முதல்வரை பந்தாடிய EPS...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share