×
 

EPS உண்மை பேசின நாளே இல்ல... பூங்கா பெயர் மாற்றம் குறித்த எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உண்மை பேசிய நாளே இல்லை என ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.

பூங்காவிற்கு பேரறிஞர் அண்ணா பெயரை எடுத்துவிட்டு மாற்று பெயர் வைப்பதாக கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார். ஆட்சிக்கு வரும்போது அண்ணா வழி நடப்போம் என்று கூறிய திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே மறந்தது அப்பேரறிஞர் பெருந்தகையைத் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். 

மேடைகளில் பேசும் வெற்று வாய்ச் சவடாலுக்கும், குடும்ப தயாரிப்புப் படங்களில் வசனம் வைத்து வியாபாரம் செய்ய மட்டுமே இவர்களுக்கு அண்ணாவின் தேவை உண்டு என்றும் மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.

அதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட தன் தந்தை கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை என்றும்  கூறினார். மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று ஸ்டாலின் மாடல் திமுக அரசு பெயர் வைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இன்றும் நேர்காணலை தொடரும் இபிஎஸ்... சென்னைக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம்...!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி உண்மை பேசிய நாளே இல்லை என ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவை தாங்கள் மதித்தது போல யாரும் மதித்தது கிடையாது என்றும் தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர எடப்பாடி பழனிச்சாமி மறந்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: நிரந்தர டிஜிபி- ஐ நியமிக்க கூட வக்கில்லை... உயிரைப் பறிக்கும் களமா மருத்துவமனைகள்? இபிஎஸ் சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share