செங்கோட்டையன் வச்ச குறி... இபிஎஸ் உறவினர் ஆலைக்கு சிக்கல்... அதிகாரிகளோட களமிறங்கிய அமைச்சர்...!
வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனின் காரை முற்றுகையிட்டு சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்ட நிலையில் ஆய்வு.
அந்தியூர் அருகே செயல்படும் ஸ்பேக் மற்றும் எத்தனால் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் ஆய்வு. விவசாய நிலங்களில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பூனாட்சி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் (அக்கா மகன்) உறவினருக்கு சொந்தமான ஸ்பேக் (மரவள்ளிக்கிழங்கு மற்றும் சோயா பீன்ஸில் இருந்து ஸ்டார்ச் தயாரிக்கும் கம்பெனி), மற்றும் எத்தனால் ஃபேக்டரி செயல்பட்டு வருகிறது,
இந்த இரண்டு ஆலைகளில் இருந்தும் வெளியேறும் கழிவு நீர் மற்றும் புகையினால் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டதோடு காற்றும் மாசுபட்டுள்ளது, இதன் காரணமாக அப்பகுதி வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகும் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக கடந்த 18ஆம் தேதி அப்பகுதிக்கு நலத்திட்டங்கள் தொடங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனின் காரை ராமச்சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்,
இதையும் படிங்க: அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் அதிமுக... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!
அப்போது செங்கோட்டையன் இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சென்றிருந்தார். இந்த நிலையில் தான் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் ராமச்சந்திரபுரத்திற்கு வருகை தந்து அந்த கிராம மக்களிடம் பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை பார்வையிட்டார்.
இதனை அடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் குடிக்கும் தண்ணீர் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் ஆழ்துளை கிணறுகளின் தண்ணீர் மாதிரிகளை சேகரித்தனர்,
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அதிகாரிகளை அதனை பரிசோதனை செய்ய உத்தரவிட்டார், அந்தத் தண்ணீர் எடுத்து பரிசோதித்த போது தண்ணீரில் 2000 tds அளவு இருப்பது தெரிய வந்தது,
தொடர்ந்து அவற்றின் மாதிரிகளையும் பரிசோதனைக்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கேன்களில் பிடித்தனர்,
ஆய்வு குறித்து செய்தியாளர்கள் பேட்டி கேட்க்கையில் பேட்டி தர மறுத்த அமைச்சர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருப்பதாகவும், தண்ணீரில் டிடிஎஸ் அளவு அதிகமாக இருப்பதாகவும் பரிசோதனை முடிவுகளில் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்து சென்றார்.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு எதிரான அதிருப்தி அணியின் அடுத்த மூவ்! அதிமுகவில் அரசியல் கணக்கு! பரபரப்பு தகவல்!