ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குல என்ன பயம்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறீங்க? இபிஎஸ் சரமாரி கேள்வி…!
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு போன்றவற்றில் திமுக பயப்படுவது ஏன் என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசு திறந்து வைப்பதாக தெரிவித்துள்ளார். மகளிருக்கு இலவச பயணம் என்று கூறுகிறார்கள்., ஆனால் பேருந்துகள் ஓட்டை, உடைசலாக உள்ளது என்று தெரிவித்தார். 2019-ல் அதிமுக ஆட்சியில் மூன்று லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, 77 சதவீதம் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதல்வர் பச்சை பொய் சொல்கிறார் என்று தெரிவித்தார்.
முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்கள் என்றும் ஏதாவது ஒரு திட்டத்தை திமுகவால் கொண்டுவர முடிந்ததா என்ற கேள்வி எழுப்பினார். கொரோனா காலத்தில் வரியே இல்லாமல் ஆட்சியை நடத்தியதாக கூறிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அதிமுக ஆட்சி இருந்தது என்று தெரிவித்தார்.
விலை நிலவரத்திற்கு பதிலாக கொலை நிலவரம் கேட்கும் நிலையில் திமுக ஆட்சி நடக்கிறது என்றும் போக்குவரத்து துறை, மின்சார துறை, டாஸ்மாக் என அனைத்திலும் ஊழல் நடைபெற்று இருப்பதாக தெரிவித்தார். திமுகவில் உள்ள எத்தனை அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். அமைச்சர்கள் மீதான வழக்குகளை பட்டியலிட்டு எடப்பாடி பழனிச்சாமி பேசினார். திமுகவில் ஊழல் வழக்குகள் உள்ள அனைத்து அமைச்சர்களும் பத்திரமான இடத்தில் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணையை கண்டு திமுகவுக்கு ஏன் பயம் வருகிறது என்று கேட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பது வேண்டாம் என எதற்காக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிடுகிறது என்று கேட்டார். அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு போன்றவற்றிலும் எதற்கு பயம் என்று கேட்டார்.
இதையும் படிங்க: கல்விக் கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியம்... வாக்குறுதி எல்லாம் என்னப்பா ஆச்சு? திமுகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்...!
யாரையோ காப்பாற்றுவதற்கு திமுக அரசு துடிக்கிறது என்று கூறினார். எஸ்.ஐ.ஆர் என்றாலே திமுகவினர் அலறுகிறார்கள் என்று தெரிவித்தார். கள்ள ஓட்டுகளால் திமுக வெற்றி பெற்றதால் எஸ்.ஐ.ஆர் என்றாலே அவர்களுக்கு பயம் வருகிறது என்று கூறினார். வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்ப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்று கேட்டார். இறந்தவர்களின் பெயர், இரட்டை பதிவு கொண்டுவர்தான் நீக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் முதலமைச்சர் ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். பாஜக குறித்து சிறுபான்மையினரிடம் சந்தேகம் உள்ளது என்றும் அதை முறியடிக்குமாறு கலைஞர் கூறினார் எனவும் தெரிவித்தார். திமுக தான் அடிமை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு வெறும் 24 தொகுதி தான்... அதிமுக தான் கிங்... இபிஎஸ் திட்டவட்டம்...!