×
 

கொஞ்சம் பொறுங்க... அதிமுக ஆட்சி வரட்டும் எல்லாம் சரியாகும்! இபிஎஸ் நம்பிக்கை

அதிமுக ஆட்சி அமைந்த உடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என திருப்பூர் தொழிலாளர்களுக்கு இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அதிமுக அரசின் சாதனைகள் தொடர்பாகவும் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார். பலதரப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அந்த வகையில் திருப்பூரில் எடப்பாடி பழனிச்சாமி பனியன் உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், விவசாயிகள், பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, டாலர் சிட்டியான திருப்பூர் தற்போது பல்வேறு செக்கல்களை சந்தித்து வருவதாகவும் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்கும் திருப்பூரில் நிலைமை தனக்கு கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். தமிழக அரசின் மின் கட்டணம் வரி உயர்வு ஆகியவற்றால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.

யாருக்கும் இழப்பு இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தப்பட்டதாகவும் 27 சங்கங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் தன்னிடம் பொறுக்கி மனுக்களை வழங்கி இருப்பதாகவும் அதிமுக ஆட்சி அமைந்ததும் திருப்பூர் தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு? - எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

திருப்பூரில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் எல்லாவற்றிற்கும் நிதி தேவை என்றும் திமுக அரசு இதுவரை நான்கு லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி இருப்பதாகவும் இன்னும் ஒரு லட்சம் கோடி வாங்குவார்கள் என்றும் தெரிவித்தார். தொழிலும் வளர வேண்டும், விவசாயமும் செழிக்க வேண்டும், உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால் தொழில் தானாக வந்துவிடும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: “சொன்னா புரியாதா? இத்தோட நிறுத்திக்கோங்க..” - விவசாயிடம் கடுகடுத்த இபிஎஸ்- கலந்தாய்வு கூட்டத்தில் சலசலப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share