சட்டம் ஒழுங்கை பற்றி கேட்டால் மட்டும் பம்முராரு... முதல்வரை விளாசிய இபிஎஸ்..!
தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1300க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்த 17 வயது மாணவன் மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவரது நண்பனின் தந்தை நாட்டு வெடிகுண்டு தயாரித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தனது பேக்கில் வைத்துக் கொண்டு கல்லூரிக்கு எடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.
அந்த நாட்டு வெடிகுண்டின் திரியை மாணவர்கள் எழுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். ஒரு மாணவனின் கை முற்றிலும் சிதைந்தது. மற்றொரு மாணவனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய முக்கிய புள்ளி..! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!
இரண்டு மாணவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
பள்ளி மாணவர்கள் இடையே கத்திக் குத்து, புத்தகப் பையில் அரிவாள், அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு என கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்ற புகழோடு அதிமுக ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டை, ஸ்டாலின் மாடல் அரசு இட்டுச்சென்றுள்ள நிலை இது தான் என தெரிவித்தார்.
அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல தனிப்பட்ட காரணம் என Justification அளிக்க இந்த அரசு முயற்சிக்க நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கித் தலை குனிந்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.
அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வரும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில், இப்போதாவது தனது Denial Zone-ல் இருந்து வெளியே வருவாரா முதல்வர் என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியல் ரீதியான விமர்சனங்கள் வைத்தால் மட்டும் பாய்ந்து வந்து வீர வசனம் பேசும் முதல்வர், மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன் என கேள்வி எழுப்பினார்
படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள் என்றும் வெடிகுண்டுகள் அல்ல எனவும் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: இபிஎஸ்-ன் சூறாவளி சுற்றுப்பயணம்! எந்தெந்த ஊருக்கு போறாரு தெரியுமா? 3ம் கட்ட பிரச்சாரத்தின் முழு விவரம்..!