சிறு தீங்கு நிகழ்ந்தாலும் ஸ்டாலினே பொறுப்பு... ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கைதுக்கு EPS கண்டனம்...!
இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வருகின்றனர். பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311, சமவேலைக்கு சம ஊதியம் என்பதை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து HouseArrest செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அரசு, அவர்களை வீட்டுச் சிறையில் வைத்து, செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என தகவல்கள் வருவதாகவும் கூறினார்.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்று EPS தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடியாரே பயந்துட்டீங்களா? சும்மா விடமாட்டேன்... இபிஎஸ்க்கு ஜெயலட்சுமி எச்சரிக்கை...!
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் ஸ்டாலின் ஏற்க வேண்டும் என்றும் அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து , மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்... 2வது நாளாக வேட்பாளர் நேர்காணல் நடத்தும் EPS..!