லேப்டாப் திட்டத்தை சீர்குலைக்க EPS முயற்சி... உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு...!
லேப்டாப் விவகாரம் தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது.
இது ஏழை எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவியது. அதிமுக ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது, ஆனால் கொரோனா தொற்று பரவிய 2020ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்திட்டத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் அதிமுக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேர்தல் வரவுள்ளதால் மடிக்கணினி தரவுள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மடிக்கணினி வழங்கும் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்து விட முடியாதா என எடப்பாடி பழனிச்சாமி முயற்சிப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: களமாடும் திமுக... ஜன. 24ல் இளைஞரணி அடுத்த மாநாடு...!
சில வாரங்களில் மாணவர்களுக்கு மடிக்கணினி தரப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்வியின் அர்த்தம் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார். திராவிட மாடல் அரசு மாணவர்களுக்கு நிச்சயமாக மடிக்கணினி வழங்க தான் போகிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரொம்ப பெருமையா இருக்கு.. சர்வதேச போட்டிகளில் அசத்தும் தமிழக மாணவர்கள்... துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்...!