×
 

#BREAKING தொண்டையில் சிக்கிய வாழைப்பழம்... மூச்சுத்திணறி 5 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்...!

வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் 5 வயது குழந்தை துடிதுடித்து மரணித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் - முத்து லட்சுமி தம்பதிக்கு, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமாகி 5 வயதில் சாய் சரண் என்ற ஆண் குழந்தையும், மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது. தம்பதி இருவரும் கூலி வேலைக்குச் சென்று வந்த நிலையில், வழக்கம் போல் பாட்டி வீட்டில் சிறுவனை விட்டுச் சென்றுள்ளனர். 

பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு, பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அங்கிருந்த வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிட்டுள்ளான். அப்போது அந்த வாழைப்பழமானது உணவுக்குழாய்க்குச் செல்வதற்கு பதிலாக மூச்சுக்குழாய்க்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் சாய் சரண் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பாட்டி, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். 

இதையும் படிங்க: ஆளுநர் ரவியை அடக்கணும்..! நிதியில் தமிழ்நாட்டுக்கு பட்டை, நாமம் தான்… முதல்வர் ஸ்டாலின் அனல் பேச்சு…!

பாட்டியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அண்டை வீட்டார் சிறுவன் சாய் சரணை அவசர அவசரமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் உறவினர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். 

சிறுவன் சாய் சரணின் உடல் தற்போது பிரேதபரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவனுடைய குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

இதையும் படிங்க: திமுக அரசின் சட்டத்திற்கு எப்போதும் வெற்றிதான்... மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்த முதல்வர் பெருமிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share