×
 
☰

ஆயுத பூஜை நாளில் அவலம்... துடிக்க துடிக்க ராஜேஸ்வரியை அடித்தே கொன்ற கணவன்... கொலையை மறைக்க செய்த காரியம் தான் ட்விஸ்ட்டே...!

ஈரோட்டில் ஆயுத பூஜை நாளில் மதுபோதையில் இருந்த கணவன் மனைவியை அடித்தே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ஆயுத பூஜை நாளில் மனைவியை மது போதையில் அடித்துக் கொன்ற  கணவன். கொலையை மறைத்து மனைவியின் உடலை அடக்கம் செய்ய முயற்சி. உடலை மீட்ட போலீசார் கணவனை கைது செய்து விசாரணை.

ஈரோடு மாவட்டம்  நசியனூர் அருகே உள்ள காரைவாய்க்கால் புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் நாகராஜ் -  ராஜேஸ்வரி வயது (38)., தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  தினக்கூலி அடிப்படையில், நாகராஜ் தறி பட்டறை ஒன்றில் நெசவாளராகவும், மனைவி ராஜேஸ்வரி பிரின்டிங் பட்டறை ஒன்றிலும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறை தினத்தில்,  கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, நாகராஜுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில், ஆவேசமடைந்த நாகராஜ், மனைவியை பலமாக அடித்து உதைத்து தாக்கி உள்ளார். இதில்  ராஜேஸ்வரி கழுத்து,  தலை உட்பட உடலில் பல இடங்களில் காயமடைந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இதையும் படிங்க: ஈரோட்டில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடூரம்... வேடிக்கை பார்த்த காவல்துறை, அரசு அதிகாரிகளால் சர்ச்சை...!

இதனையடுத்து மனைவியை அடித்துக் கொன்று விட்டு வெளியே யாருக்கும் தெரியாதவாறு கொலையை மறைக்க, உறவினர்களுடன் சேர்ந்து மனைவி ராஜேஸ்வரியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதுதொடர்பான தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் உயிரிழந்த ராஜேஸ்வரி உடலை மீட்டனர். அங்கிருந்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து நாகராஜை கைது செய்த போலீசார் சித்தோடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாகராஜ் உடன் சேர்ந்து வேறு யாரேனும் ராஜேஸ்வரியை தாக்கினார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஆயுத பூஜை நாளில், கணவனே மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
 

இதையும் படிங்க: கேவலம் இதுக்காகவா?... ஆடையின்றி கிடைத்த செவிலியர் சடலம்... கைதான கொடூரன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share