×
 

பகீர் கிளப்பிய ஈரோடு இரட்டை கொலை சம்பவம்..! போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பறந்த உத்தரவு..!

ஈரோட்டில் தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பொது இடங்களின் சிசிடிவி காட்சிகளை தனிப்படையிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய தம்பதிகளான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து, 15 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த நிலையில், பொது இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படையில் ஒப்படைக்க ஈரோடு மாவட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. ஏப்ரல் 28, 29,30 ஆகிய மூன்று தினங்களில் சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில யாருக்கும் பாதுகாப்பு இல்ல..! சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு.. நயினார் கடும் தாக்கு..!

இதையும் படிங்க: உயிரை கையில் பிடிச்சுட்டு இருக்கணுமா? வெட்கமா இல்லையா? ஸ்டாலினுக்கு இபிஸ் சுளீர் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share