×
 

"கோடிக்கணக்கில் ஊழல்".? எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது பாய்ந்த வழக்கு..! தலையில் இறங்கும் பேரடி..!!

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு வீட்டில் இன்று காலையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளர், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் இருந்து வருகிறார். திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவருமான எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் திருவண்ணாமலை வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

மேலும் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது பணி நியமனம் செய்வதில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.

இதையும் படிங்க: எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை அமைத்ததில் முறைகேடு நடந்த புகாரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கரூரில் உதவி இன்ஜினியர் ஆக இருந்த தீபிகா, திருச்சியில் உதவி இன்ஜினியராக இருந்த கார்த்திக், சென்னையில் உதவி இன்ஜினியர் ஆக இருந்த ரஃபீக் முகமது, கரூரில் கணக்காளராக இருந்த சத்யா, சங்கர் ஆனந்த், மதுரை பொறியாளர் கண்ணன், சென்னையில் ஜூனியர் என்ஜினியர் ஆக பணியாற்றிய பூபாலன் சிங் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: "கட்சி நிதி"..! திமுகவுக்கு ஏன் பதற்றம்..? முதல்வர் மீது பொய்யான பிம்பம்... ஆதவ் அர்ஜுனா காட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share