வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு... வாக்களிக்க முடியாமல் மக்கள் தவிப்பு... 50 நிமிடமாக காத்திருந்த கே.என்.நேரு...!
சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்கும் பணி தாமதமானது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு 43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வக்காளர்கள் உள்ளனர்.
வாக்குப்பதிவிற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கினை செலுத்தி அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்தனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் ஓரிரு சந்தேகங்களையும் தீர்த்து வைத்தனர்.
இதனை அடுத்து சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு, காலை முதலே வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஜனநாயக கடமையாற்றத் தொடங்கினர். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்கும் பணி தாமதமானது.
இதையும் படிங்க: திருமண மண்டப கோலத்தில் மாதிரி வாக்குச்சாவடி..,! நன்னாரி சர்பத் வழங்கி வாக்காளர்களை வரவேற்க தயார்...!
திருச்சி மேற்கு தொதிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க அமைச்சர் கே.என். நேரு காலையிலேயே வந்தார். அந்த வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறாமல் தாமதமானது. அளித்ததற்கான பட்டனை அழுத்திய உடன் பச்சை பட்டன் எரியும். ஆனால் தொடர்ந்து சிகப்பு பட்டன் எரிவதால் அதிகாரிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கே.என். நேரு வாக்களிப்பதற்காக 50 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருந்தார். இயந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் தனது வாக்கை பதிவு செய்தார்.
இதேபோல் ராமநாதபுரம் முதுகுளத்தூர், ஈரோடு சம்பத் நகர், நாகர்கோவில், கடலூர் நெய்வேலி சட்டமன்ற தொக்கிது உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டுள்ளது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மேலதிருப்பாலக்குடி கிராமத்தில் வாக்குச்சாவடி 149ல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.
இதையும் படிங்க: நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??