×
 
☰

பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட முன்னாள் கேப்டன் கைது! வேலூரில் அதிரடி!

வேலூர் கீழ்வல்லத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற உளவுப் பிரிவு அதிகாரிகள் அவரை வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காட்டுகாநல்லூரில் பதுங்கியிருந்த முன்னாள் ராணுவ அதிகாரி பாபு பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைத் தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான பாபு ராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். கடைசியாக ராணுவ தளவாடப் பிரிவில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகும் அவர் ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்து வந்ததாக சர்வதேச போலீசார் மற்றும் உளவுத்துறை தகவல் அளித்ததன் அடிப்படையில் தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

கீழ்வல்லத்தில் வசித்து வந்த பாபு பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் ராணுவ தளவாடங்கள் தொடர்பான ரகசியத் தகவல்களை அனுப்பியுள்ளார். தெரியாத தகவல்களை ராணுவத்தில் விசாரித்து அந்தப் பெண்ணுக்கு ஏறத்தாழ ஓராண்டாக அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல்பாடு ராணுவ உளவுப் பிரிவினரால் கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க: Angel Payal!! இந்திய கடற்படையில் பாகிஸ்தான் உளவு வலை? ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் அதிரடி திருப்பம்!

வேலூர் கீழ்வல்லத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற உளவுப் பிரிவு அதிகாரிகள் அவரை வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாபு மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள் பாபுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரது செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்ணில் ஒரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்த முழு விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வேலூர் தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபு மும்பையில் இருந்தபோது பாகிஸ்தான் பெண் ஒருவருடன் ரகசியத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவர் மூலம் ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை மத்திய மற்றும் மாநிலப் புலனாய்வு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: எல்லைப் பாதுகாப்பு ரகசியங்கள் லீக்?! ராணுவ அதிகாரியின் மனைவி மீது சீன உளவு குற்றச்சாட்டு! தீவிர விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share