×
 

சிக்கிய 2 பக்க கடிதம்... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலையில் திடீர் ட்விஸ்ட்... 7 பேர் மீது அதிரடி நடவடிக்கை..!

உளுந்தூர்பேட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தூக்கு போட்டு தற்கொலை இரண்டு பக்கம் கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு, இது தொடர்பாக திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளையராஜா உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எ. அத்திப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் அருணாசலம் மகன் நைனா (65) இவருக்கும் இவருடைய தம்பி மனைவி சரிதா என்பவருக்கும் இடையே இவர்களுக்கு சொந்தமான குமார் 40 ஏக்கர் நிலம் பாகப் பிரிவினை செய்வது தொடர்பாக இவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சரிதா கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தனது பாக சொத்தை பிரித்து தர மறுப்பதாக நைனா மீது புகார் கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளையராஜா நேற்று  நைனாவை அழைத்து விசாரணை செய்துள்ளார்.  இதனால் மனமடைந்து காணப்பட்ட நைனா, நேற்று இவருடைய விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை காணவில்லை என இன்று உறவினர்கள் தேடிய மோட்டார் கொட்டகையில் சடலமாக கிடந்தார்.

இதையும் படிங்க: பேராசிரியரின் குரூர புத்தி! தட்டி கேட்காத கல்லூரி.. தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..!

மேலும் அங்கு இரண்டு பக்கம் நைனா எழுதிய கடிதம் கிடந்ததை எடுத்து போலீசார் விசாரணை செய்ததில் தொடர்ந்து தம்பி மனைவி சரிதா மற்றும் அவருடன் சேர்ந்த சிலர் நிலத்தையும் வீட்டையும் பிரித்து தருமாறும் ,வீட்டை விட்டு காலி செய்யுமாறும் மிரட்டி வந்ததாகவும்,  போலீசாரிடம் புகார் கொடுத்து தன்னை மிரட்டி வந்துள்ளனர் என்றும் அதில் திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளையராஜா உள்ளிட்ட சிலர் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நைனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அதற்கு அங்கிருந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல கூடாது என தடுத்து வாக்குவாதம் செய்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

உடல் அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி அசோகன் விசாரணை செய்து திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளையராஜா உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என் சாவுக்கு இவங்க தான் காரணம்.. மேலாளர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..! சிக்கிய பரபரப்பு கடிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share