×
 

நில மோசடி.! ரெண்டு வாரம்தான் டைம்..! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க உத்தரவு.!

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பான நில மோசடி வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்பாக நீண்டகாலமாக விசாரணையில் உள்ள முக்கிய வழக்கு, 2001-2006 ஆண்டுகளில் அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சில அசையா சொத்துக்களை முடக்கியது. இந்த வழக்கு தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் உள்ளது.

அமலாக்கத்துறை மேலும் சில சொத்துக்களை முடக்க முயன்றபோது, அதற்கு எதிரான மேல்முறையீடுகள் மற்றும் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்திய காலங்களில் அவர் மீது பதிவான மற்றொரு வழக்கு, முதலமைச்சர் குறித்து அவதூறாகவும் ஒருமையில் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

அதற்குப் பிறகு ஜாமீன் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த நிலையில் மற்றொரு வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க: நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

தேவாலயத்துக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை சமர்ப்பித்து குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க: அதிமுக vs தவெக? மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாறிய அரசியல் கணக்கு! உளவுத்துறை என்ன சொல்லுது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share