×
 

ஓஹோ இதுக்குத்தானா? - விஜயின் சனிக்கிழமை ரகசியத்தை சல்லி சல்லியாய் நொறுக்கிய பொன்முடி...!

விஜய்க்கு என்று தனி கூட்டம் இல்லை, விக்கிரவாண்டி, மதுரையில் கூடிய கூட்டம் தான் திருச்சியிலும். ஆகையால் தான் சனிக்கிழமை சனிக்கிழமை கூட்டம் வைக்கிறார் என முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். 

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி திமுகவினர் அந்தந்த பகுதிகளில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்" என்று உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

 இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி தலைமையில் திருக்கோவிலூர் நகராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்" என்று கூட்டாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, திமுக தலைவர் விஜய் குறித்து முப்பெரும் விழா அறிக்கையில் கூறியிருப்பதும் அதற்கு விஜயின் அறிக்கை சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு?, விஜய்க்கு ஆங்காங்கே கூடிய கூட்டம் கிடையாது. விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி கூட்டியது போல, அதே கூட்டம் தான் மதுரை மாநாட்டிலும் கூட்டப்பட்டது. அதேபோலத்தான் திருச்சியிலும்  கூட்டப்பட்டுள்ளது, ஆகையால் தான் சனிக்கிழமை சனிக்கிழமை பிரச்சாரத்தை விஜய் நடத்துகிறார்.

இதையும் படிங்க: அரசியல்ல சொகுசு கேக்குதா? அன்புக்கரங்கள் திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் ஃபயர் ஸ்பீச்..!

தினமும் ஒவ்வொரு தொகுதிக்காக சென்றால் அங்கிருக்கிறவர்கள் மட்டும்தான் வருவார்கள். இவர்கள் திரும்பி வர மாட்டார்கள் என்பதால் தான் திட்டமிட்டு  சனிக்கிழமை அவர் கூட்டம் நடத்துகிறார். அதனால் தான் அடுத்த சனிக்கிழமை திருச்சியில் யார் இருந்தார்களோ அவர்கள் தான் அடுத்த சனிக்கிழமை கூட்டத்திலும் இருப்பார்கள். குழுவாக சேர்வார்களே தவிர அவருக்கு என்று ஒரு பெரிய வாக்காளர் கிடையாது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

அதன் அடிப்படையில் தான் தமிழக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்து இருக்கின்ற அறிக்கை அதுதான், புதிய எதிரியாக இருந்தாலும் பழைய எதிரியாக இருந்தாலும் அவர்களை வீழ்த்தி தமிழகத்தில் தலைவர் தளபதியின் ஆட்சி தான் தொடர்ந்து இருக்கும். 2026 இல் மட்டுமல்ல தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக தளபதி தான் என்பது தமிழக மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என்றார். 

 

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ.22 ஆயிரம் கோடி கொள்ளை...புள்ளி விவரத்தோடு திமுகவை பொளந்தெடுத்த இபிஎஸ்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share