×
 

அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி: ஆய்வகத்தில் வெடித்த கண்ணாடிக் குடுவை; 2 மாணவர்கள் படுகாயம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் ஆய்வகத்தில் கண்ணாடிக் குடுவை வெடித்துச் சிதறி படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வேதிப் பொறியியல் துறையில் இன்று (டிச.12) நிகழ்ந்த ஒரு விபத்து காரணமாகப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆய்வகம் ஒன்றில் திடீரெனக் கண்ணாடிக் குடுவை வெடித்துச் சிதறியதில், இரு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எம்.டெக். மாணவர் நித்திஷ் (வயது 23) மற்றும் பி.டெக். மாணவர் சூர்யா (வயது 20). ஆய்வகத்தில் இருந்த கண்ணாடிக் குடுவை எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. வெடித்ததிலிருந்து சிதறிய கண்ணாடித் துகள்கள் இரு மாணவர்களின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தியதில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த இரு மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ரெஃபெக்ஸ் குழுமத்தில் ஐ.டி. ரெய்டு: ₹1,000 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு!

இதையும் படிங்க: இந்தியக் கடற்படை மாரத்தான்:  டிசம்பர் 14 அன்று அதிகாலை 3 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share