தவெக மீது பொய் புகார்... FACT CHECK-ல் வெட்ட வெளிச்சமான உண்மை...!
விஜய் கூட்டத்திற்கு பணம் கொடுக்காததால் வாக்குவாதம் செய்ததாக வெளியான தகவல் பொய் என கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடந்த 13 ஆம் தேதி முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை 2024 பிப்ரவரி மாதம் தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களிடையே தனது கொள்கைகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் எடுத்துச் செல்வதற்காக பல்வேறு மாநாடுகளையும், சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறது.
முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார். அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றி வருகிறார். விஜய் சுற்றுப்பயணத்தில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டத்துக்கு வந்த மக்களுக்கு பணம் கொடுக்காத்தால் மக்கள் தவெக கட்சியினருடன் வாக்குவாதம் செய்வதாக தகவல் பரவியது. வாக்குவாதம் செய்வது போன்ற காணொளியையும், பதிவு ஒன்றையும் பதிவிடப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: ரூ.2 ஆயிரம் கோடிப்பே??... பணத்தை தண்ணியா அள்ளிவீசும் விஜய்... வீக் எண்ட் சுற்றுப்பயணத்திற்கு செலவழிக்கும் தொகை இவ்வளவா?
அது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது, இந்த நிகழ்வானது, தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ததற்காக, அறவழி போராட்டம் செய்தவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்ததை கண்டித்து தவெக கட்சியினர், அவர்களுக்கு ஆதரவு தர நேரில் சந்தித்தக் காணொளி என்று கூறப்பட்டு உள்ளது. அதை திரித்து கூறி பரப்பப்படும் போலியான செய்தி என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ரூட்டை மாற்றிய விஜய்… சேலத்துக்கு வரலையாம்… எந்த மாவட்டத்துக்கு போறார் தெரியுமா?