உழவர் நலன் காக்கும் சாதனைகள் தொடரும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி
உழவர் நலன் காக்கும் சாதனைகள் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
100 வேலை திட்டத்தைக் குலைத்து விவசாயக் கூலி தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் பாஜக அரசு கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உழவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அவர், உழவர் நல்லனை பாதுகாப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு உழவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். உழவே தலை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி என சாதனை படைத்து வருவதாக கூறினார்.
உழவன் செயலி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார இணைப்புகள் என உழவர்களுக்காக நமது திராவிட மாடல் திமுக அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து சாதனை புரிகிறது தமிழ்நாடு என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு காத்திருக்கு… ஆனா SUSPENS… இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்…!
உழவர்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனைப் பாதுகாக்கிறோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தை குலைத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உழவர் நலனை காக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும் என்றும் உழவர் வாழ்வு செழிக்கும் எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீவிரமா களமாடனும்... ஆட்சி நமதே...! திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை...!