சினிமா டைலாக்குல பேசுற மாதிரி செய்யலைன்னா... முதலமைச்சர் விஜய்க்கு கெடு விதித்த விவசாயிகள்...!
முதல்வர் விஜய் சினிமா டயலாக்குகளில் பேசியது போல விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்த பணம் வழங்காததை கண்டித்து ஜூன் 15ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு. முதல்வர் விஜய் சினிமா டயலாக்குகளில் பேசியது போல விவசாயிகளின் குறைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தல்
நெல்லை மாவட்டத்தில் மானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்த நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 56 ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொள்முதல் செய்துள்ளனர்.
கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை மூன்று மாத காலமாக இன்னும் அதிகாரிகள் வழங்கவில்லை. ஒன்றிய அரசு கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் காண்ட்ராக்ட் அடிப்படையில் செயல்படுத்தி வருவதால் இந்த நிலை தொடர்கிறது.
இதையும் படிங்க: What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!
மேலும் நெல் விளைவிக்க 4 மாதம் அதன் பணம் கிடைக்க 3 மாதம் என ஏழு மாதமாக விவசாயிகளின் வீடுகளில் கவலையான நிலை ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்து விட்டோம் இருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே முறையாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க கோரி வருகின்ற ஜூன் 15ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்காக நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் வந்திருந்தனர். மேலும் முதல்வர் விஜய் சினிமா டயலாக்குகளில் பேசியது போல விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "விஜய் எனும் பொம்மையை பாருங்க"... இது "துரோக சக்தி"..! நயினார் சரமாரி விளாசல்..!!