×
 
☰

விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கோரம்... தந்தை, மகன் அடுத்தடுத்து துடிதுடித்து பலி...!

திருவாரூர் அருகே விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த தந்தை, மகன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம், புதூர் அருகே உள்ள புதூர் கிராமத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ராஜா என்பவர் தனது வயல் பகுதியில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகன் ஆதித்தியன் டிராக்டரை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, திடீரென அந்தப் பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து, டிராக்டர் மீது பட்டுள்ளது. இதில் ஆதித்தியன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிங்க: 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு! ஞானேஷ் குமாருக்கு எதிராக கேரள அரசு அதிரடி!

இதனைத் தொடர்ந்து, அருகில் நெல் விதைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவரது தந்தை ராஜா, மகனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரது உடல்களையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மின் கம்பி அறுந்து விழுந்ததில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வயல் பகுதிகளில் அதிக அளவில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்லும் நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பலமுறை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மின்சார வாரியத்தில் புகார் மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மின் கம்பி அறுந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share