#BREAKING அதிகாலையில் அதிபயங்கரம்... சொந்த மகனையே உயிருடன் தீவைத்து கொளுத்திய தந்தை... பகீர் பின்னணி...!
மது போதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்த மகன் அருன்ராஜை தந்தை தாளமுத்து ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் மது போதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்ட மகன் அருள்ராஜை வீட்டிற்கு வெளியே வைத்து இன்று அதிகாலை மண்ணெண்ணெய் ஊற்றி தந்தை தாளமுத்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்ததை தொடர்ந்து சிப்காட் காவல் துறை விசாரணை.
தூத்துக்குடி மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து இவருக்கு இரண்டு குழந்தைகள் பெண் குழந்தைக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார் வீட்டில் தாளமுத்து அவரது மனைவி மற்றும் மகன் அருன்ராஜ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்
டிரைவராக வேலை பார்த்து வந்த அருன்ராஜ் ஊதாரியாக சுற்றி திரிந்துடன் தினமும் மது போதையில் வீட்டில் தகராறு செய்வதுடன் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது மேலும் மது போதையில் தனது தாய் மற்றும் தந்தையை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் விடுமுறைக்குத் தாய் வீட்டுக்கு வந்த தனது தங்கை குழந்தையை கொன்று விடுவதாகவும் மது போதையில் மிரட்டி வந்துள்ளார் அருன்ராஜ் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டு மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது அங்கிருந்து வந்த பின்பு மது போதைக்கு அடிமையான அருன்ராஜ் தொடர்ந்து மது அருந்திவிட்டு அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்
இதையும் படிங்க: "அத்துமீறிய மாமனார்"..! ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்த இளம் மருமகள்..! சென்னையில் பரபரப்பு..!!
இந்த நிலையில் நேற்று இரவு மது அருந்திய அருன்ராஜ் மது போதையில் தனது வீட்டிற்கு வந்து தனது தந்தை தாளமுத்து மற்றும் தாயுடன் தகராறு செய்துள்ளார் இதைத்தொடர்ந்து தந்தை தாளமுத்து மகன் அருள்ராஜ் வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டிவிட்டு உள்ளே சென்று படுத்து தூங்கியுள்ளார்
இந்த நிலையில் இன்று அதிகாலை மது போதையில் வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த அருன்ராஜை தந்தை தாளமுத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தந்தை தாளமுத்து சிப்காட் காவல் நிலையத்தில் சரணடைந்தார் இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் துறையினர் எரிந்த நிலையில் இருந்த அருன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: இரு கைகளும் அறுக்கப்பட்டு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் மீட்பு; கணவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!