×
 

சாமி கிட்ட போறோம்... தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை! உருக வைக்கும் ஆடியோ

தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாக நாங்க சாமிகிட்ட போறோம் என ஆடியோ அனுப்பியது நெஞ்சை குமுறச் செய்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ராஜா என்பவர் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சாமி கிட்ட போறோம் எனக் கூறி ஆடியோ பதிவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் முந்திரி விவசாயி ராஜா. இவர் தனது மகள் மற்றும் மகன் ஆகியோரை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மகன் குமரகுரு, மகள் தாரணி ஸ்ரீ, ராஜா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தனது குழந்தைகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒன்றாக செல்பி எடுத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டு உள்ளனர். மேலும், வாட்ஸ் அப்பில் நண்பர் ஒருவருக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். சாமிகிட்ட போறோம் என ஆடியோவில் குழந்தைகள் கூறும் கண்ணீரை வரவழைக்கும் ஆடியோ கிடைக்கப் பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: தேவநாதன் சொத்து விபரம் எங்கே? முழு தகவலை கொடுங்க.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!

மனித வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்து, எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் அதற்கு மாற்று வழிகள் உள்ளன என்பதை புரிந்து கொண்டு வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எதுவும் அறியாத இளம் குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தையின் செயல் மனதை கலங்கச் செய்கிறது.

இதையும் படிங்க: பரபரப்பு... இளைஞர் கார் ஏற்றி கொலை! காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வீட்டார் வெறிச்செயல்…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share