திக்...! திக்...!! பயத்தில் திமுக... வெள்ளை அறிக்கை வெளியீடு எப்போது?... நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி அறிவிப்பு...!
தமிழக பட்ஜெட் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும்.
தமிழக அரசின் பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார் தூத்துக்குடியில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு
தமிழக நிதி அமைச்சர் மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மரிய வில்சன் இன்று சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார் தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் மரிய வில்சனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பணிமய மாதா பேராலயத்தில் அமைச்சர் மரிய வில்சன் வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலக புகழ் பெற்ற பணிமயமாதா பேராலயத்திற்கு ஆண்டுதோறும் வருவேன் அந்த வகையில் தற்போது வந்துள்ளேன். மாதாவை தரிசனம் செய்துவிட்டு இங்கிருந்து துவங்குகிறேன். நெல்லை மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நெல்லை மாவட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிரந்தர எதிர்க்கட்சி திமுகவா.? பரபரக்கும் பனையூர்..! தவெகவுக்கு கூடும் மவுசு...!
தமிழக பட்ஜெட் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும். மேலும் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார் என அவர் தெரிவித்தார்.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
அரசின் வரவு-செலவு கணக்குகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை, வட்டி மற்றும் கையில் உள்ள நிதி இருப்பு போன்றவற்றைத் துல்லியமாக விளக்க வெள்ளை அறிக்கை பயன்படுகிறது. இதன் மூலம் முந்தைய ஆட்சியின் நிதி மேலாண்மை எப்படி இருந்தது என்பதையும், தற்போது அரசு என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறது என்பதையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.
60 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 நிதியுதவி, மூத்த குடிமக்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 உதவித்தொகை, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ (Diploma) படித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும், தாய் மாமன் சீர் போன்ற தவெகவின் வாக்குறுதிகள் நிதி நெருக்கடியால் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், வெள்ளை அறிக்கைக்குப் பின்னர் எந்தெந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக ஆட்சியமைத்த போதும், அப்போதைய தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதபோதகர் நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்கலாம்?! சபாநாயகர், அமைச்சர் மீது தவெக தலைமை அதிருப்தி!