பிரபல துணிக்கடையில் பயங்கர தீவிபத்து! தீயை அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை தி.நகரில் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. 2 மாடிகள் கொண்ட துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தியாகராக நகர் பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மின்கசிவு காரணமாக தீவிபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.