குட்நியூஸ் மக்களே...!! தமிழ்நாட்டிலேயே முதல் முறை... இனி ஏடிஎம்மில் தங்க நகைக்கடன்..!
AI தொழில்நுட்பத்துடன் தமிழ்நாட்டின் முதல் தங்க நகைகடன் ஏடிஎம், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் திறந்து வைக்கப்பட்டது.
AI தொழில்நுட்பத்துடன் தமிழ்நாட்டின் முதல் தங்க நகைகடன் ஏடிஎம் இயந்திரத்தை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திறந்து வைத்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1911 ஆம் ஆண்டு இந்தியரால் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு கிளைகளுடன் இந்தியா முழுவதும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது. தங்க நகை கடன் வசதியை மேம்படுத்தும் வகையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சார்பில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கிளையில் தங்க நகை கடன் ஏடிஎம் இயந்திரத்தை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளையில் தங்க நகை கடன் ஏடிஎம் இயந்திரம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் மாதம் வெங்கட ராவ் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: எஃப்.ஐ.ஆரே இந்த லட்சணம்...விசாரணை வெலங்கிடும்! ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்
ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய நகை கடன் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் வாடிக்கையாளரின் செல் நம்பர், ஆதார் நம்பர் உள்ளிட்டவற்றை செலுத்திய பிறகு தங்க நகையை இயந்திரத்தின் ஒரு பகுதியில் வைத்தால் நகையின் மதிப்பு அறிவிக்கப்படும்.. வாடிக்கையாளர் செலுத்திய நகைக்கு வழங்கப்படும் தொகையின் மதிப்பு திரையில் தெரிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்க நகைக்கு பதிலாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். பல்வேறு வசதிகளுடன் தங்க நகைகடன் ஏடிஎம் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் மாதம் வெங்கட ராவ் கூறுகையில்: தங்க நகை கடை ஏடிஎம் இயந்திரம் முதன் முதலில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்களிடம் அதிக அளவு வரவேற்பு பெற்றுள்ளதால் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியால் வாடிக்கையாளர்களின் காலவிரயம் முற்றிலும் தவிர்க்கப்படும். அதேபோல் அடகு வைக்கப்படும் நகைகளின் தங்கதன்மை உறுதிப்படுத்தப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?