நள்ளிரவு முதலே அதிரடி உத்தரவு... இன்று முதல் எகிறப்போகும் மீன்களின் விலை... ஷாக்கில் மக்கள்...!
ண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி லிருந்து ஜூன் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலங்களாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2500க்கும் மேற்பட்ட விசைப் படகுககளை நிறுத்தி வைக்கும் மீனவர்கள், இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி கடற் படையின் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தல்
தமிழக கடலோர பகுதியிலான புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்கலாம் அமலுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 2500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்துவருகின்றனர்
இந்த நிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி லிருந்து ஜூன் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலங்களாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்... முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆவேசம்...!
இந்தநிலையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகில் செல்லும்போது மீன்களின் முட்டை மற்றும் குஞ்சுகளை அழிந்துவிடும் என்ற நோக்கத்தினால் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் அரசு சார்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்..
இதையடுத்து ஆண்டுதோறும் கடல்களில் மீன் பிடித்து கடல் அலையின் ஓசையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு அரசு சார்பாக வருடத்திற்கு இரண்டு மாதங்கள் விடுமுறை நாட்கள் விடப்படுவதாக கருதி மீனவர்கள் தங்களுடைய வலைகளை கரை வந்து சேர்த்து அந்த வலைகளில் உள்ள சிறுசிறு பழுதுகளை சரி பார்ப்பதோடு, படகுகளையும் இயந்திரம் மூலமாக கரைக்கு கொண்டு வந்து அதில் உள்ள பழுதுகளை சரி பார்க்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட உள்ளனர்
மேலும் படகுகள் அனைத்தும் கடலில் உள்ள உப்புக்காற்று மற்றும் உப்பு நீரிலும் நாள்தோறும் கிடைப்பதனால் சிறுசிறு பழுது அடைவதோடு அந்தப் படகுகளில் உள்ள பலகைகளின் கனம் (எடை) அதிகரிப்பதால் டீசல் அதிகப்படியாக செலவாகும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் தங்களுடைய படகுகளை இரண்டு மாதத்திற்கு கரைக்கு கொண்டுவந்து கடுமையான வெயிலில் காயப் போடுவதால் டீசல் செலவு குறையும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண தொகையாக 8000 ரூபாய் வழங்கப்படுவதால் அந்த தொகை ஒரு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாது என்பதினால் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
மேலும் தமிழகத்தில் மட்டும் மீன் பிடி தடை காலம் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து 61 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள மீனவர்கள் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட செல்ல உள்ளனர்.
அதேபோல் ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு பெரும்பாலான மக்கள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தை சேர்ந்தவர்களே தங்களது குடும்பத்துடன் தங்கி மீன்பிடி தொழிலை செய்து வருவதால் ஆண்டிற்கு இரண்டு மாதங்களில் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்த்து திரும்பிவரும் மீனவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
மேலும் இந்த மீன்பிடி தடை காலத்தில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: “அண்ணன் இபிஎஸ் தலைமையில்....” - அந்தர் பல்டி அடித்த டிடிவி தினகரன்... ஆடிப்போன ஆண்டிப்பட்டி...!