×
 

கொடை ரோட்டில் அடுத்தடுத்து விபத்து; மத்திய பாதுகாப்பு படை வீரர் உட்பட 5 பேர் பலி...!

செம்பட்டி,  கொடைரோடு பகுதியில் அடுத்தடுத்து விபத்து. மத்திய பாதுகாப்பு படை வீரர் மற்றும்  சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழப்பு.  காவல்துறையினர் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (25) இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய பாதுகாப்பு படையை பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் இதே பகுதியைச் சேர்ந்த மதன்பாபு (24) என்பருடன் இரு சக்கர வாகனத்தில் சின்னாளபட்டியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த போது சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்  சதீஷ்குமார் பலியானார். அவரது நண்பர் மதன்பாபு  படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 அதேபோல் உசிலம்பட்டியை சேர்ந்த தக்காளி வியாபாரி  சரத்குமார் (25) என்பவர் கடந்த வாரம் செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலை கூலம்பட்டி பிரிவு என்ற இடத்தில் ஏற்பட்ட சாலை  விபத்தில் படுகாயம் அடைந்து,  திண்டுக்கல் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார். இவரை நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக இவரது உறவினர்கள் உசிலம்பட்டியை சேர்ந்த குமார் அவரது மனைவி பூங்கொடி (42) ஆகியோர்  மோட்டார் சைக்கிளில் வத்தலகுண்டில் இருந்து,  திண்டுக்கல் நோக்கி சென்றனர்.


அப்போது செம்பட்டி அருகே வத்தலகுண்டு  சாலையில் முனியப்பன் கோவில் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் பைக்கில், அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் வேகமாக சென்று  அவர்கள் மீது மோதிய விபத்தில், பூங்கொடி என்பவர் சம்பவ இடத்தில் பலியானார். அவரது கணவர் குமார் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  அதேபோல், இவரது உறவினர்  சிகிச்சை பெற்று வந்த, தக்காளி வியாபாரி சரத்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: பைக்கில் அப்பாவுடன் ஜாலியாக பயணித்த 2 மகள்கள்.. அதிவேகத்தில் எமனாக வந்த சொகுசு கார்... !

மற்றொரு விபத்தில்  செம்பட்டி அருகே,  புதுசத்திரத்தைச் சேர்ந்த விவசாய  கூலித்தொழிலாளி பழனிச்சாமி (50)  என்பவர் காமன்பட்டி என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

 அதேபோல் கொடைரோடு அருகே,  கண்ணார்பட்டியைச் சேர்ந்த ஜெனார்பாண்டி (35) அவரது மனைவி பிரியா (31) அவர்களது நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது  மகன் புகழ்தரன் ஆகியோர்  மோட்டார் சைக்கிளில்  சென்றனர். அப்போது, அம்மையநாயக்கனூர் அருகே  லாரி மோதிய  விபத்தில் சிறுவன் புகழ்தரன்  சம்பவ இடத்தில் பலியானார். ஜெனாபாண்டி,  பிரியா சிகிச்சை பெற்று வருகின்றனர். செம்பட்டி,  கொடைரோடு பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... அப்பளம் போல் நொறுங்கிய வேன் - 7 குழந்தைகள் உட்பட 11 பேர் துடிதுடித்து பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share