சென்னைக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபரா? ஏன் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை... அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்!
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் அகற்றுவது தொடர்பான விவகாரத்தில் சென்னையில் 31 சதவீதம் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன எனக் கூறியுள்ள நீதிமன்றம், கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளின்போது கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது என்றும் யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன எனவும் குறிப்பிட்டனர்.
பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதி, உரிமம் வழங்கவில்லை என்ற சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையும் படிங்க: #SORRY..ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி
இது தொடர்பான விசாரணையில் பொது இடத்தில் கொடிக்கம்பம் அகற்ற உத்தரவிட்ட நிலையில் சென்னையில் 31% கொடிக்கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பிகளை முழுமையாக அகற்றாத ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்ட கொடி கம்பிகளை ஏற்றல் 28க்குள் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பி உள்ளது.
மாநிலம் முழுவதும் 19 இடங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் நூறு சதவீதம் அகற்றப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்டு நீதிபதிகள் சென்னையில் மட்டும் ஏன் 31% கொடிக்கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டு இருக்கிறது என்றும் சென்னையில் மட்டும் உயர்நீதிமன்ற உத்தரவை 100% அமல்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியது. சாலை நடுவில் உள்ள தடுப்புகளை கொடிக்கம்பங்கள் நடுவதற்கு அரசு ஏன் அனுமதி அளிக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அஜித்குமார் கொலை அரச பயங்கரவாதம்.. திருமாவளவன் காட்டம்..!