×
 

இந்த ஏரியா மக்கள் உஷாரா இருந்துங்கோங்க... விட்டாச்சு வெள்ள அபாய எச்சரிக்கை...!

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால்   கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை மொத்தம் 120 அடி உயரம் கொண்டது கடந்த மாதத்தின் முதலே தென்மேற்கு பருவமழை ஆனது தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை,  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலான காடம்பாறை, சத்தி எஸ்டேட் ,கவர்கள் போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் 120 அடி கொண்ட அணை தற்போது 119 அடியை எட்டி உள்ளது.,

மேலும் வினாடிக்கு 1077 கன அடி தண்ணீர் ஆழியார் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் 120 அடி கொண்ட அணை தனது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணையிலிருந்து மூன்று மதகுகள் வழியாக சுமார் 1329 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் ஆழியார் ஆற்றங்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவோ, மற்றும் கால்நடைகளை ஆற்றோரும் அழைத்துச் செல்லவும் கூடாது என பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்ததோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.,

இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமையட்டும்! மீனவர்களுக்கு மாஸ் அறிவிப்பு கொடுத்த இபிஎஸ்...

இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கில் மீண்டும் திருப்பம்; ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் திடீர் எதிர்ப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share