பிரபல உணவகத்தால் வந்த வினை.. மருத்துவமனையில் இளைஞர்கள்.. சீல் வைக்க சென்று அதிகாரிகளுக்கு ஷாக்..!
சென்னையில் வாடிக்கையாளர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நல உபாதைகள் ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நண்பர்களான விக்னேஷ் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் நண்பர் ஒருவர் வீட்டை காலி செய்ய உதவி செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது வேலை முடித்துவிட்டு அருகில் இருந்த பிரபல கடை ஒன்றில் விக்னேஷ் மற்றும் ஸ்டீஃபன் உடன் வேலை பார்த்த ஆறு பேரும் அதே கடையில் உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஆறு பேருமே மறுநாள் காலையில் மயக்கம் வயிற்று வலி வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்த பின்னர் வீட்டிற்கு சென்ற அனைவரும் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டதையடுத்து, ஆறு பேரும் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடுதளத்தில் ஏற்பட்ட பிரச்சனை.. அரை மணி நேரமாக வானில் வட்டம் அடித்த விமானம்.. பரபரப்பான சென்னை விமான நிலையம்!
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆறு பேரும் உணவு தரம் குறைந்து இருப்பதால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திருவல்லிக்கேணியில் உள்ள அந்த பிரபல உணவகத்தில் இன்று திடீரென ஆய்வு செய்ய வந்தனர்.
அவர்கள் வருவதற்கு முன்னர் ஓட்டலில் இருந்த ஊழியர்கள் முழுவதும் கடையை மூடி தப்பி ஓடிய நிலையில், அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுமதி இன்றி இந்த உணவகம் மீண்டும் திறக்கப்படக்கூடாது என்றும் அதற்கு பாதுகாப்பு வழங்க கோரியும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 400 ஏக்கரை ஆட்டையப்போட்ட இஸ்லாமியர்கள்... கத்தோலிக்க பிஷப்கள் வக்ஃபு திருத்த மசோதாவுக்கு ஆதரவு..!