×
 

3,000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்... 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்(டு)ம் வருகிறது ஃபோர்டு... கையெழுத்தானது முக்கிய ஒப்பந்தம்...! 

4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. குஜராத்தில் இருந்த ஃபோர்டு ஆலை டாடா நிறுவனத்திற்கு விற்கப்பட்ட போதும், சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு வளாகம் விற்பனை செய்யப்படாமலேயே உள்ளது. 

உலகின் முன்னணி நிறுவனமான போர்டு, இந்தியாவில் தமிழகத்திலும், குஜராத்திலும் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வந்தது.இதில் சென்னை மறைமலை நகரில் அமைந்துள்ள போர்டு வளாகம் 360 ஏக்கரில் அமைத்து, ஆண்டுக்கு 2.5 லட்சம் கார் இஞ்சின்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. 

ஆனால் சர்வதேச அளவில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்தியாவில் கார் உற்பத்தியை ஃபோர்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. குஜராத்தில் இருந்த ஃபோர்டு ஆலை டாடா நிறுவனத்திற்கு விற்கப்பட்ட போதும், சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு வளாகம் விற்பனை செய்யப்படாமலேயே உள்ளது. 

சமீபத்தில் அமெரிக்காவிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் தனது உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டபோது, சிகாகோவில் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரைச் சந்தித்துப் பேசினார். முதல்வரின் கோரிக்கையை ஏற்ற ஃபோர்டு நிறுவனமும், சமீபத்தில் சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க அனுமதி கோரி மாநில அரசுக்கு கடிதம் வழங்கியது. 

இதையும் படிங்க: எந்த சமரசமும் கிடையாது! பாக்., பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி வார்னிங்!

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஃபோர்டு நிறுவனத்துடன் ரூ.3,250 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 600க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஆட்டோமொபைல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

மேலும், தொழிற்சாலையைச் சுற்றியுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் போன்றோருக்கும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் முதல் கட்டமாக ஆண்டுக்கு 2,35,000 புதிய என்ஜின்கள் மற்றும் பவர் ட்ரெயின்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த உற்பத்தித் திட்டம் புதிய மற்றும் அடுத்த தலைமுறை என்ஜின்தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் என ஃபோர்டு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொழிற்சாலையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, புதிய வகை இன்ஜின்கள் உற்பத்தி செய்யும் பணிகள் 2028 அல்லது 2029 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்...!! ஸ்டாலினை காபி அடித்த பாஜக... பீகாரில் அதிரடி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share