பொட்டை அழிச்சிட்டு வாங்க... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆ.ராசா...!
திமுகவில் இருப்பவர்கள் கட்சியின் கரைவேட்டி கட்டி கொண்டால் நெற்றியில் உள்ள பொட்டை அழித்துவிட்டுதான் வர வேண்டும் என ஆ.ராசா பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம் என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இருப்பவர்கள் கட்சியின் கரைவேட்டி கட்டி கொண்டால் நெற்றியில் உள்ள பொட்டை அழித்துவிட்டுதான் வர வேண்டும் என்றும், பொட்டு வைத்து கொண்டால் நமக்கும் சங்கிகளுக்கும் வேறுபாடு தெரியாமல் போய்விடும் என்றும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆராசா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பங்கேற்று பேசினார். அப்போது, கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் தேவைப்படுவோர் வைத்துக்கொள்ளலாம். அன்புதான் கடவுள் என்று சொன்னாலும், மனிதனுக்கு மனிதன் இடையே காட்டுகின்ற இறக்க உணர்விலே தான் கடவுள் இருக்கிறார் என்று சொன்னாலும், கள்ளமில்லாத உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், அண்ணா சொன்னதை போல ஏழைகள் சிரிப்பிலே இறைவனை காணுங்கள் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட கடவுள் மீது நமக்கு ஒன்னும் கோவம் இல்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை. நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம். யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு புது தலைவலி.... நீதிமன்றம் பிறப்பித்த கறார் உத்தரவு...!
திமுக கரை வேட்டி கட்டிக்கொண்டால் பொட்டு வைக்காதீர்கள். கரை வேட்டியுடன் வெளியே வந்தால் பொட்டை அழித்து விட்டு வாருங்கள். திமுகவுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. கொள்ளை இல்லாமல் போனால் அந்த கட்சி அழிந்து போய் விடும். அப்படி அழிந்து கொண்டிருக்கும் கட்சி தான் அதிமுக எனக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!!