×
 

புதருக்குள் மறைந்திருந்து ஆட்டம் காட்டும் ராதாகிருஷ்ணன்... இரவில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை...!

பொதுமக்கள் அவசியம் என்று இரவு நேரங்களில் மக்கள் வெளிய வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதிக்குள் மறைந்து கொண்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை வனத்துறையினர் சமவெளி பகுதிக்கு கொண்டுவர  முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். இதனால் மீண்டும் நாளை காட்டு யானையை வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியானது தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அவசியம் என்று இரவு நேரங்களில் மக்கள் வெளிய வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி  பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏழு ஆண்டு காலமாக ராதாகிருஷ்ணன் என்கிற காட்டு யானை அப்பகுதியில் இதுவரை 12 பேரை கொன்றுள்ளது.இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி படிக்க வேண்டும் என இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பலகட்ட போராட்டம் நடத்தியவர் அதன் பெயரில் இந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும்  நடவடிக்கையில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் நூறுக்கும் மேற்பட்ட  வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்  நான்கு கும்கி யானைகள் இரண்டு தெர்மல் கேமராக்கள் மூலமாக இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அடிதூள்...!! நவராத்திரி பரிசை அறிவித்த மோடி... ஒரே நேரத்தில் 25 லட்சம் பேருக்கு இலவசம்...!

இன்று காலை முதல் புதர்கள் நிறைந்த பகுதியில் இருந்த ராதாகிருஷ்ணன் காட்டு யானையை சமவெளி பகுதிக்கு கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து ஈடுபட்டனர். மீண்டும் அந்த காட்டு யானை ஆனது கடந்த புதர்கள் நிறைந்த பகுதியில் சென்று மறைந்தது இதனால் வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் நாளை  இந்த காட்டு யானையை படிக்கும் பணியாளனது துவங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இப் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் இந்த காட்டு யானையை விரைந்து பிடிக்க வேண்டும் எனவும் இதனால் தங்கள் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் தெர்மல் ட்ரோன் கேமரா மூலமாகவும் எச்சரிக்கை செய்து வருகின்றனர் .

இதையும் படிங்க: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44வது கூட்டம்.. வரும் 26ம் தேதி டெல்லியில் கூடுகிறது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share