வெளிநாடு தப்ப முயற்சி; ஏர்போர்டிற்குள் நுழைந்து முன்னாள் அமைச்சர் மகனை அலேக்காக தூக்கிய போலீஸ்...!
17 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவருடைய மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சண்முகநாதனுடைய மகன் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சண்முகநாதனுடைய மகன் ராஜா தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் 59 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவருடைய சொந்த சகோதரியே 17 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் இந்த நடவடிக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவினுடைய ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டிருக்கிறார்கள்.
இவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருக்கிறார்கள். ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்து இவரை தேடி வந்த நிலையில், வெளிநாடு தப்ப முயன்றவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். ராஜாவும் அவருடைய மனைவி அனுஷாவும் வந்து ஒமினா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் வந்து முதலீடு செய்தால் 16% பங்குகள் தருவதாகக்கூறி அவருடைய சகோதரியுடைய கணவருக்கு சொந்தமான ஸ்ரீபெரம்பதூர் பகுதியில் இருக்கக்கூடிய இரண்டு ஏக்கர் சொத்தினுடைய பத்திரங்களை அடமானமாக அவர் வாங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் பெயரில் வந்து 11 கோடிக்கு வங்கி கடனும் பெற்று அந்த பணத்தையும் வந்து அவருக்கு தராமல் ராஜா ஏமாற்றியதாக அவருடைய சகோதரி புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆவண மோசடி தடுப்பு பிரிவு ஈடிஎப் என்று சொல்வார்கள் இந்த ஆவண மோசடி தடுப்பு பிரிவில் இந்த மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது மொத்தமாக 17 கோடிரூபாய் இதை ஏமாற்றியதாக வழக்கை பதிவு செய்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இவரையும் தேடி வந்தார்கள். இந்த நிலையில் தான் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை வந்து கைது செய்திருப்பதாகவும் இந்த வழக்கில் வேறு யாரேனும் தொடர்ந்து இருக்கிறார்களா என்று குறித்து விசாரித்து வருவதாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...
இதையும் படிங்க: ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.