×
 

அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்! தவெக அரசின் நிதி புகாருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்து அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்; ரூ.10.5 லட்சம் கோடி எடுத்துச் சென்றதாக உண்மைக்கு புறம்பாக புழுதி வாரித் தூற்றியுள்ளார் என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் திருமதி. கீர்த்தனா அவர்கள், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகத் திமுக முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, கடந்த கால நிதி நிர்வாகம் குறித்துச் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பேசியிருந்த கருத்திற்குப் பதிலடி கொடுத்துத் தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிக்கையில் மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க என்று போகிற போக்கில் அமைச்சர் கீர்த்தனா புழுதி வாரித் தூற்றியுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு விclusterம்பானது.

அரசு நிர்வாகத்தில் அவருக்கு இருக்கும் அனுபவமின்மை காரணமாகவே, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இவ்வாறு இட்டுக்கட்டிக் கூறி வருகிறார். இது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. உள்நோக்கோடு, எவ்வித ஆதாரமும் இல்லாமல் கழகத்திற்கு எதிராக மக்களிடையே ஒரு மாய பிம்பத்தைச் சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க அமைச்சர் முயற்சிப்பது மிக மோசமான விஷமத்தனமாகும்.

இதையும் படிங்க: 25 பேரின் பதவியும் பறிக்கப்படும்! அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை!

புதிய அமைச்சரின் இந்த அதிரடிக் குற்றச்சாட்டுக்குத் தவெக அமைச்சரவையில் உள்ள மூத்த தலைவர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்களும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளரும் தங்களது மௌனத்தைக் கலைக்க வேண்டும்.

தொழில் துறை அமைச்சரின் இத்தகைய கற்பனைக் குதிரைக்கு அவர்கள் இருவரும் இடித்துரைத்து உடனே கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது இதுபோன்ற பொய்யும், புனைகதைகளும் மிக்க மலிவான பிரச்சாரங்களுக்குத் தவெக அரசு துணை போகப் போகிறதா? எனத் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், முந்தைய திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்துத் தவெக அமைச்சரும், அதற்குத் திமுகவின் முன்னாள் அமைச்சரும் மாறி மாறி மோதிக்கொள்வது தமிழக அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா கார் வேண்டாம்!! சொந்தக்காருக்கு மாறிய விஜய்! விமர்சனங்களால் திடீர் மாற்றம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share