விடிந்ததுமே அதிர்ச்சி... முன்னாள் சபாநாயகர் தனபால் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!
அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது
கடந்த 2 வாரத்திற்கு முன்பு அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதால் அதற்காக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் ஓரிரு நாட்களில் அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். தற்போது இன்று காலை மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உயர் ரத்த அழுத்த பாதிப்பு தனபாலுக்கு உள்ள நிலையில், மருத்துவமனையிலும் இதற்காக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனபால் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, தொகுதி மறுசீரமைப்பை அடுத்து 2011ம் ஆண்டில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: அமெரிக்கா: வெடித்து சிதறிய ராணுவ ஆயுத ஆலை..!! மாயமான 19 பேர்.. கதி என்ன..??
2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக அவருக்கு பதவியை வழங்கினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இருப்பினும், அவர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என தனபாலுக்கு சொந்த கட்சி நிர்வாகிகளே மரியாதை அளிப்பதில்லை என்ற பேச்சு கிளம்பியது. இது அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதிமுக சார்பில் சபாநாயகர் வேட்பாளராக தனபால் பெயரை அறிவித்தார். இதனால் ஆளும் கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என அனைவரும் எழுந்து நின்று வணங்க கூடிய அளவிற்கு தனபாலுக்கு ஜெயலலிதா மரியாதை பெற்றுத் தந்தார். 9 ஆண்டுகள் சபாநாயகராக பொறுப்பு வகித்த தனபால் தனது பணியை திறம்பட செய்தது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையின் துணைத் தலைவராகப் பதவி வகித்த இவர் சட்டப்பேரவைத் தலைவர் ஜெயக்குமார் பதவி விலகியதை அடுத்து அக்டோபர் 10ம் தேதி 2012ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் 19வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவினாசி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இதையும் படிங்க: சிலியில் ரிக்டர் அளவில் 7.6 நிலநடுக்கம்.. பெரும் அச்சுறுத்தல்..! பீதியில் மக்கள்..!!