×
 

வீடுகளை உள்வாடகைக்கு விட்டால் மோசடி வழக்கு: டிஜிபி அதிரடி உத்தரவு..!

உள்வாடகை, உரிமையாளருக்கு தெரியாமல் அடமானம் வைப்பது சிவில் வழக்காக இனி கருதப்படாது

வீடுகளை குத்தகைக்கு எடுத்து உள்வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் அடமானம் வைப்பவர்கள் மீது மோசடி வழக்கு பதியப்படும் என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

உரிமையாளருக்கு தெரியாமல் உள்வாடகைக்கு விடுபவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். உள்வாடகை, உரிமையாளருக்கு தெரியாமல் அடமானம் வைப்பது சிவில் வழக்காக இனி கருதப்படாது.

விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு வீடியோவை சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் வெளியிட்டு மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக மாஜி டிஜிபி ஓம் பிரகாஷ் மர்ம மரணம்.. பெங்களூருவில் பெரும் பரபரப்பு.!!

மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர்ஜிவால், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு . சென்னை உயர்நீதிமன்றம் நீதிபநி ஜெகதீஷ் சந்திரா பாராட்டு தெரிவித்தார் காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் எஸ். சந்தோஷ் ஆஜரானார்.

இதையும் படிங்க: பொன்முடி மேல கேஸ் போட்டாச்சா? டிஜிபிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share