ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கணுமா..?? மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி..!!
மை ஆதார் போர்டல் மூலம் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்களை 2027 ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவசமாக திருத்திக்கொள்ள மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது.
மத்திய அரசு ஆதார் அட்டையில் உள்ள முக்கிய விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்கும் வசதிக்கான கால அவகாசத்தை ஒரு ஆண்டு நீட்டித்துள்ளது. இதன்மூலம், பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட தகவல்களை மாற்ற விரும்புவோர் 2027 ஜூன் 14 வரை மை ஆதார் இணையதளம் அல்லது புதிய ஆதார் செயலி மூலம் கட்டணமின்றி புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஏற்கெனவே இந்த சலுகை 2026 ஜூன் மாதத்துடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது யுஐடிஏஐ (UIDAI) இதை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எடுத்தவர்கள் பலரும் இதுவரை தங்கள் விவரங்களைப் புதுப்பிக்காமல் இருப்பதால், இந்த நீட்டிப்பு அவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
UIDAI தொடர்ந்து மக்களுக்கு வலியுறுத்தி வரும் வகையில், ஆதார் தகவல்களை துல்லியமாக புதுப்பிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை இந்தியாவில் அடையாளச் சான்றாக மட்டுமின்றி, பல்வேறு அரசு திட்டங்கள், வங்கி கணக்குகள், PAN இணைப்பு, மொபைல் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது. விவரங்கள் பழையதாக இருந்தால் பல்வேறு சேவைகளைப் பெறும்போது சிரமங்கள் ஏற்படலாம். எனவே, முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது பிற தகவல்களில் மாற்றம் தேவைப்படுபவர்கள் உடனடியாக புதுப்பித்துக் கொள்ளுமாறு UIDAI அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசின் பொருளாதார நிர்வாகத் தோல்வி..!! பெரும் நெருக்கடியை நோக்கி இந்தியா..!! ராமதாஸ் கடும் கண்டனம்..!!
இலவச புதுப்பிப்பு எப்படி?
மை ஆதார் (myaadhaar.uidai.gov.in) இணையதளம் அல்லது புதிய ஆதார் மொபைல் செயலி மூலம் தங்களே ஆவணங்களைப் பதிவேற்றி புதுப்பிக்கலாம். இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால், e-Seva மையங்கள் அல்லது பொது சேவை மையங்கள் (CSC) மூலம் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் முறையில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு அல்லது OTP அடிப்படையில் எளிதாக முடிக்கலாம்.
UIDAI அதிகாரிகள் கூறுகையில், “மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை துல்லியமாக பராமரிப்பது அவர்களின் சொந்த பலனுக்கே” என்று வலியுறுத்தினர். குறிப்பாக, இளைஞர்கள், முதியோர், கிராமப்புற மக்கள் ஆகியோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் ஆதாரை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நீட்டிப்பு முடிவடையும் முன் அதிகபட்சம் பயன்படுத்துமாறு அதிகாரிகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தகவல்களுக்கு UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
இதையும் படிங்க: சர்க்கரை ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை தடை! மத்திய அரசு அதிரடி உத்தரவு!